முகவுரை : அடிப்படையில் இது ஒரு இஸ்லாமிய இலக்கிய இணைய தளம், இதில் இஸ்லாத்தின் உண்மை நிலையையும் இன்றைய
இஸ்லாமியர்களின் உண்மை நிலையையும் விவரித்துள்ளேன்,
இஸ்லாம்
கற்பிப்பதெல்லாம் மனித வர்க்கமாகிய மனிதன் , மனிதனாக வாழ வேண்டும் என்பதே ! மனித நேயம் மற்றும் அமைதியையே
பெரிதும் போதிக்கிறது இஸ்லாத்தில், ஆனால் இன்றோ அவைகள் இஸ்லாமியர்களிடத்தில்
இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது , மனித நேயம் மற்றும் அமைதியை போதிக்கும் தூய
இஸ்லாத்தில் இன்று மனிதன் மனிதனாக வாழ்வதை விட்டுவிட்டு மனித நேயத்தையும் முற்றிலும்
மறந்துவிட்டு இஸ்லாமிய
சகோதரர்களுக்குள் கொள்கை வேறுபாட்டினால் ஆயுதங்களையே கையில் எடுத்துக் கொண்டு
வெட்டிக்கொண்டும் சுட்டுக் கொண்டும் சாகடிக்கப்படுகிறார்கள்,
இவர்கள் சாகடிக்கப்படுவது இஸ்லாமிய தனது
சகோதரர்களை மட்டுமல்ல..
நமது
இஸ்லாத்தையும்தான்...!
மேலும்
விரிவுரைகளை தலைப்புகள் என்ற பகுதியின் கீழ் ஒவ்வொரு தலைப்பாக கொடுத்துள்ளேன்
இன்ஷா அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர் வழியை காட்டி நேரிய வழியில் நடந்து
அல்லாஹுக்கும் அவனது தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முற்றிலும்
கட்டுப்பட்டு நடக்கும் நன்மக்களாக நம்மை ஆக்கி அருள எல்லாம் வல்ல இறைவன் அருள்
புரிவானாக ! ஆமீன் !!
மற்றும் இறைவனின் அத்தாட்சிகளாக இவ் உலகில்
காட்டப்பட்டுள்ள பல அற்புதங்களின் புகைப்படங்களும் வீடியோ துண்டுகளும் இருக்கின்றன,
மேலும் ஹிந்து கிரிஸ்டியன் போன்ற
மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள ஒற்றுமையையும் விளக்கப் பட்டிருக்கிறது..
படியுங்கள் ! சிந்தியுங்கள் ! செயல்படுங்கள்
!!