உறுப்பினர்கள்

கல்கி அவதாரம் நபிகள் நாயகமே !



ஹிந்துக்களின்  வேத ஆகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, நமது இறைதூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களே ஆவார்கள்.
இதை நாம் மட்டும் சொல்லவில்லை, தலைசிறந்த ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட் ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் அவர்களும் சொல்கிறார்
மேலும் அவர் எழுதிய “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த
புத்தகம் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இந்த புத்தகம் வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும்.
பண்டிட் வைத் ப்ரகாஷ், பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு ஹிந்து கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், இப்புத்தகத்தை முழுக்க  படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர். மற்றும் ஹிந்துக்கள் எதிர்ப்பார்க்கும் அவதாரமான கல்கியும், இந்தியாவின் தலைச்சிறந்த ஹிந்துக்களின் வேதங்கள் அனைத்திலும்  குறிப்பிடும் கல்கி அவதாரமும் அது வேறு யாருமல்ல ! ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றி  வெற்றி கண்டவரும், இஸ்லாத்தின் இறுதி தூதருமான மக்காவில் பிறந்த நபி முஹம்மது (ஸல்) என்னும் மாமனிதரே ஆவார். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், இஸ்லாத்தின் நபி முஹம்மது (ஸல்) அவர்களை ஏற்று இஸ்லாத்தை தழுவ வேண்டும் என்பதை இறைச் செய்தியாகவே சொல்லிக் கொள்கிறோம்
1.வேதங்கள், கல்கி அவதாரம் தான் பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும் ஏனெனில், 2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார் என்றிருக்கிறது. அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும். 3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பக்த் என்றும் தாயை (சூமதி) சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால் இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பக்த் என்றால் அடிமை என்று அர்த்தம். ஆக, விஷ்னு பக்த் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. (சூமதி) சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது உறுதிப்படுகிறது. 4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மது (ஸல்) அவர்களுடைய  விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார். 5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்பு மிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மது (ஸல்) அவர்களுடைய விஷயத்தில் சரியாகிறது. 6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது (ஸல்) அவர்கள் ஒருவர் தான். 7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ‘மிஃராஜ்’ பயணம் இதைத்தானே சொல்கிறது? 8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். 9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மது  (ஸல்) அவர்களே அன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத். தமிழ் மொழி பெயர்ப்பு : சகோதரி சுமஜ்லா
அதுமட்டுமின்றி மேலும் எனது ஆய்வில் கிடைத்த ஹிந்துக்களின் வேத ஆகமங்களில் உள்ள வசனங்களையும் இங்கு ஆதாரத்துடன் தருவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்                                                                              - Maarkka Ngaanam
பகவத் கீதையில்...    
அகில உலக தூதரின் தந்தையுடைய பெயர் விஷ்ணுபக்த் (அப்துல்லாஹ்) தாயாரின் பெயர் சூமதி (ஆமினா). பேஸாக் திங்கள் அன்று பன்னிரெண்டாம் தேதி பிறப்பார்கள். அவருக்கு முன்னர் அவருடைய தந்தை மரணமெய்துவார். ஷால்மன் தீவின் ராணியை மணப்பார் (செல்வ சீமாட்டி கதிஜா) திருமணத்தில் அவரது பெரிய தந்தை (அபு தாலிஃப்), மூன்று சகோதரர்கள் (செய்யதினா அலி, ஜாஃபர், உகைல்) கலந்துக் கொள்வார்கள். ஒரு குகையில் (ஹீரா) ஒரு வானவரிடம் (ஜிப்ரீல்) படிப்பு பெறுவார். (மார்க்க) பிரச்சாரம் செய்யும் போது மக்கள் துன்பம் பல இழைப்பார்கள் சிரமம் தாங்காமல் தென்மலைப் பிராந்தியம் நோக்கிப் புறப்படுவார். பின்னர் வாளுடன் நாடு திரும்ப வருவார். நாடு அவர் கைவசமாகிவிடும். அவருடைய குதிரை பர்க்கை விட (மின்னலை விட) வேகமாய்ப் போகும். (புராக் வாகனம்) அதில் அவர் அண்ட சராசரத்தையும் சுற்றிப் பார்ப்பார் (மிஃராஜ் பயணம்).
     பவிஷ்ய புராணம்
மஹரிஷி வியாச முனிவர் கூறுகிறார்
" ஏதஸ் மின்னந்தரே மிலேச்ச ஆச்சாரியன ஸமன் வித மஹாமத் இதிக்கியாத சிஷிய சாஹா ஸ்மன்னித நிருபஷ் சேவ மஹா தேவ மருஸ்த்தல நிவாஸினன் "
(பவிஷ்ய புராணம், பாகம் - 3 சூக்தம் 3, சுலோகம்  5 - 8)
விளக்கம் :-
     பின்னர் ஒரு புனிதர், எழுதப் படிக்கத் தெரியாதவர் அவர் நாமம் முஹம்மது என்பதாம். அவர் தமது தோழர்களுடன் தோன்றுவார். அவர்கள் தாம் உலகிலுள்ள அரக்க பிசாசுகளையெல்லாம் (ஷைத்தான்களாகிய கெட்ட நஃப்சுகளை) அழிக்கும் வழிகளைக் காண்பிக்கக் கூடியவர், எழுதப் படிக்கத் தெரியாத அவர் பாவம் புரியாத புனிதரே ! அவர் பரிசுத்தமானவரே ! அவர் ஒரு பாலைவன வாசி.
பவிஷ்ய புராணம் :-
லிங்கச் சேதி சிகாஹீன சுமச் சுறுதாரி ஸ்தூஷக உச்சால பிஸர் வபக்ஷி பவிஷ்யதி ஜனோமம் முஸலை நைஸ் மஸ்கார
(பவிஷ்ய புராணம், பாகம் - 3, சூக்தம் - 3, சுலோகம் - 25)
பொருள் :-
அவர்கள் சுன்னத் செய்வார்கள், குடுமியிருக்காது தாடி வைத்திருப்பார்கள், சப்தம் போட்டு அழைப்பார்கள் (பாங்கு), அவர்கள் முஸ்லீம் (முஸலை) என்று அறியப்படுவார்கள். 
அதர்வன வேதம் அல்லோ உபநிஷத்தில் :-
அல்லோஜி யேஷ்டம் பரமம் பூரணம் பிரஹ்மான அல்லாம். அல்லோ ரஸூலா மஹாமத் கபஸ்ய அல்லோ அலையாம் ஆதல்லா பூகமேகம் அல்லா பூகனி வாதகம். அல்லா பஞ்ஞென ஹுத ஹிருத்த வா அல்லா சூரிய சந்திர நஷீத்திரம் அல்லா ரிஷிணாம சர்வ திவ்வியாம் இந்திராய பூர்வ மாய பரமந்த ரீஷா. அல்லா பிறுத்திவ்யா அந்த ரீஷம் விசுவரூபம் இல்லாம்
கபர இல்லாம் இல்லல்ல நீ இல்லல்லா. ஓம் அல்லா இல்லல்லா அனாதிஸ் வருபா அத்தர் வணா சியாமா சியாமா ஹூம் ஹிரீம். ஜனான் பகன ஸித்தான் ஜல் சாரண் அதிர்ஷ்டம் குருகுரு புட் ஸபரஸட ஸம ஹாரீணி ஹும் ஹரீம் அல்லா ரஸூல மஹமத் கபரிஸ்ய.
(அல்லோ உபநிஷத் 1 – 10 )
பொருள் :-
அல்லாஹ் முழுமையானவன், பூரணமானவன், எல்லா பிரபஞ்சமும் அவனுடையது. மஹாமத் அல்லாஹ்வின் ரஸூலாக இருக்கிறார்கள். பூமியை இயக்குகின்ற இறைவனான அவனே பூமியின் பரிபாலகனும் சிருஷ்டிகர்த்தாவும் ஆவான். இறைவன் ஒருவனேயன்றி வேறில்லை. அரூபியான இறைவனின் ஓங்கார நாதத்தைப் பாருங்கள். ஓம், ஹரீம் மந்திரங்கள் அடங்கிய அதர்வண வேதத்தை இறக்கிய இறைவனே,
மக்களையும் பசுக்களையும் மற்றவற்றையும் படைத்தார். அரூபியான அந்த இறைவனையே துதி செய்யுங்கள். ஓம் ஹரீம் மந்திரம் மூலம் அசுர வர்க்கத்தை அழிக்கும் மஹாமத் அல்லாஹ்வின் தூதர் ஆவார். ஏக இறைவனைத் தவிர வேறு நாயனில்லை.
சாம வேதத்தில்...
அஹமது தனது நாயனிடமிருந்து முழு ஞானமுள்ள வேதத்தை அடைந்துவிட்டார், (பர்பட்டாக் - 2, தஷ்தீ - 6, மந்தர் 8 )
தெய்வீகமுள்ள திருத்தூதர் மக்களில் சிறந்தவர், அகிலத்தார் எல்லோருக்கும் வழிகாட்டுவார் எல்லோரையும் விட  அவருக்கு கீர்த்தி கிடைக்கும் (அதர்வ வேதம் : மாந்தர் 7 )
ஜனங்களே ! இந்த அறிக்கையை மிக்க கண்ணியத்துடன் கேளுங்கள், முஹம்மது புகழப்படுவார், அவர் மனிதர்களிலிருந்தே தோற்றுவிக்கப்படுவார், எதிரிகளுக்கிடையிலிருந்து நாடு துறந்து போகும் அவரை யாம் எமது பாதுகாப்பில் ஆக்கிக் கொள்வோம். அவருடைய வாகனங்கள் 20 ஆண் பெண் ஒட்டகங்களாகும், அவர்கள் எந்த அளவுக்கு உயர்த்தப் படுவார்கள் என்றால் வானங்களையெல்லாம் கடந்து அவைகளையும் தாழ்த்திவிடும் (அளவுக்கு)

2 comments:

  1. ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களின் கண்களை பார்த்த மறு கணமே அவர்களை காண சென்ற பக்தர்களின் மனதில் இருந்த ஆயிரம் கேள்விகளுக்கு ஒரு விநாடியில் அனைத்து பதில்களும் எப்படி கிடைத்தன? ஷிர்டி சாய் பாபா, இயேசு கிறிஸ்து போன்ற மகான்களுக்கு எப்படி நடக்க இருக்கும் சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே துல்லியமாக தெரிந்து கொண்டார்கள்? எங்கோ நடக்கும் சம்பவம் தன் கண் முன் நடப்பதை போன்ற அனுபவம் வள்ளலார் போன்றவர்களுக்கு எப்படி ஏற்பட்டது? இது இல்லாமல் இன்னும் நிறைய சித்திகளை அவர்கள் எப்படி அடைந்தார்கள் என்பது உண்மையில் அவர்களுக்கே தெரியாது. தெரிந்திருந்தால் கண்டிப்பாக அதை மக்களுக்கு சொல்லி இருப்பார்கள்.ஆனால் அவர்கள் அடைந்த அனைத்து சித்திகளையும் ஒரே விநாடியில் நம்மால் எளிதாக அடைய முடியும். அதற்கு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய இந்த ஒரே ஒரு ஆழமான இரகசியத்தை சுயம் பகவானே இந்த இறுதி காலத்தில் வெளிப்படுத்துகிறார். இந்த அற்புதமான ஆன்மீக பொக்கிஷத்தை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் ஆன்மீக விழிப்புணர்வு அடைய உதவுங்கள்.

    http://bktamil.blogspot.in/2015/11/murli-nov-15-2015.html

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete